செந்தில் பாலாஜி 
தமிழக செய்திகள்

டிரான்ஸ்பார்மர் கொள்முதல்: தமிழ்நாடு அரசுக்கு எந்தவித இழப்பும் ஏற்படவில்லை - செந்தில் பாலாஜி

கடந்த அதிமுக ஆட்சியிலும் என்ன நடைமுறை பின்பற்றபட்டதோ, அதே நடைமுறையில் தான் கொள்முதல் செய்யப்பட்டது.

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

* கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட நடைமுறை தான் தற்போதும் பின்பற்றப்படுகிறது.

* டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை.

* டிரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்ததில் தமிழ்நாடு அரசுக்கு எந்தவித இழப்பும் ஏற்படவில்லை.

* கடந்த அதிமுக ஆட்சியிலும் என்ன நடைமுறை பின்பற்றபட்டதோ, அதே நடைமுறையில் தான் கொள்முதல் செய்யப்பட்டது.

* டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிப்பதை நெருக்கடியாக பார்க்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.