செந்தில் பாலாஜி 
தமிழக செய்திகள்

ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு கொள்முதல் செய்வது மின்வாரியத்தை சீரழித்து விடும் - செந்தில் பாலாஜி

தவெக அரசின் ஆட்சியில் மின்சாரம் சொந்த உற்பத்தி 34 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவது ஏன்? என்பதற்கு முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழ்நாட்டில் மின்வெட்டை பற்றி பேசாத நாட்களே இல்லை.

* அரசு நிகழ்ச்சி, அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்வு என தமிழகத்தில் எப்போதும் மின்வெட்டு ஏற்படாத நாளே இல்லை.

* தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு ஏற்படும் வகையில் இன்றைய ரீல்ஸ் ஆட்சியில் மோசமான நிலை உள்ளது.

* மக்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து கவலையின்றி அமைச்சர் உள்பட அனைவரும் உள்ளனர்.

* கேட்ட கேள்விக்கு மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பதில் சொல்வதில்லை.

* கேள்வி கேட்டால் பஞ்சாப்பில் பவர் கட் என மோசமான பதில் கூறுகிறார் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார்.

* திமுக ஆட்சியில் ஆண்டுதோறும் மின்தேவை அதிகரித்த நிலையிலும் சமாளித்து மின் விநியோகம் செய்யப்பட்டது.

* மின்சாரத்துறை அமைச்சர் அவர் துறை தவிர அனைத்து துறைகளுக்கும் பதில் சொல்லி விளக்கம் தருவார்.

* 5 மாதத்தில் மின் விநியோகத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கையை தவெக அரசு எடுக்கவில்லை.

* திமுகவை விமர்சித்த தவெக அரசு தற்போது முழுக்க முழுக்க வெளிச்சந்தையில் மின்கொள்முதல் செய்கிறது.

* ரூ.20-க்கு யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக அமைச்சர் பதவி விலக வேண்டும்.

* மார்ச் - மே மாதங்களில் உச்சபட்ச தேவையை முன்னேற்பாடாக நவம்பர், டிசம்பரிலேயே டெண்டர் போடுவது வழக்கம்.

* தவெக அரசின் ஆட்சியில் மின்சாரம் சொந்த உற்பத்தி 34 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

* மின் உற்பத்தியை குறைத்து வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்கும் வகையிலான நடவடிக்கை எடுத்துள்ளது தவெக அரசு.

* கூடுதல் விலைக்கு விற்பவர்களிடம் அந்த மாநிலங்களே வாங்காத நிலையில் அங்கிருந்தே மின்சாரம் வாங்குகிறது தவெக அரசு.

* திமுக ஆட்சியில் 1 யூனிட் மின்சாரம் ரூ.20-க்கு கொள்முதல் செய்வதாக நிர்மல்குமார் விமர்சித்து இருந்தார்.

* வெளிச்சந்தையில் மின்கொள்முதல் செய்தால் ஒட்டுமொத்த நிதிநிலையை சீரழிந்து தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை தடுக்கும்.

* இந்தியாவிலேயே டிரான்ஸ்பார்மர் பழுது 2.6% என மிக குறைந்தளவாக உள்ள மாநிலம் தமிழகம் மட்டும் தான்.

* மின்சாரம் சொந்த உற்பத்தி எவ்வளவு, வெளிச்சந்தையில் எவ்வளவு மின் கொள்முதல் என வெளிப்படையான தகவல் இல்லை.

* திமுக ஆட்சியில் தமிழகத்தின் மின் தேவை 20,830 மெகாவாட்டாக இருந்தது.

* திமுக ஆட்சியில் உற்பத்தி செய்த மின்சாரம் வெளிமாநிலங்களுக்கு விற்கும் நிலை இருந்தது.

* சொந்த உற்பத்தியை விட வெளிச்சந்தையில் கொள்முதல் செய்வதற்கு நிர்மல் குமார் ஆர்வமாக உள்ளார்.

* ஆந்திராவில் இருந்து மின்சாரத்தை வாங்குகிறது தமிழக அரசு, இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

* ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு கொள்முதல் செய்வது மின்வாரியத்தை சீரழித்து விடும்.

* அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவது ஏன்? என்பதற்கு முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT