திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்களுக்கு விலக்கு வேண்டும் என செந்தில் பாலாஜி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
முன்ஜாமின் நபந்தனைப்படி திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாள் விலக்கு அளிக்கக்கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில்,"டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முனஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தை அணுக வழக்கறிஞர்களுடன் ஆலோசிக்க வேண்டியுள்ளது.
அதனால், நேரில் ஆஜராக இயலாது என்று இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசாருக்கு செந்தில் பாலாஜ நேற்று கடிதம் எழுதியுள்ளதாக" செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
முன்ஜாமின் நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்றி வருவதாகவும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், வரும் ஆகஸ்டு 5ம் தேதி கண்டிப்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரவேன் என செந்தில் பாலாஜி உத்தரவாதம் அளித்துள்ளார்.