வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பொது மக்கள் வாக்குவாதம் 
தமிழக செய்திகள்

சிறுத்தை ஒரே இரவில் 2 கன்று குட்டிகளை வேட்டையாடியதால் பரபரப்பு

ஒரே இரவில் மூன்று கன்றுக்குட்டிகளை வேட்டையாடி உள்ளது. இதில் இரண்டு கன்று குட்டிகள் உயிரிழந்த நிலையில் ஒரு கன்றுக்குட்டி உயிருக்கு போராடி வருகிறது.

மீண்டும் உயிர்பலி ஏற்படும் முன் ஆட்கொல்லி சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள வனச்சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, கரடி மான் உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக வசிக்கின்றன.

இந்த நிலையில் இங்கு வனப்பகுதியில் வசிக்கும் சிறுத்தைகள் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி கால்நடைகளை வேட்டையாடி வருவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த வாரம் பங்களா தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (36) என்பவரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது சிறுத்தை தாக்கிக் கொன்றது.

சிறுத்தை

அதைத் தொடர்ந்து வனத்துறை சார்பில் சிறுத்தையை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. ஆனால் சிறுத்தை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு ஆசனூர் சுற்று வட்டார பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் கிராமங்கள் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை ஒங்கல்வாடி கிராமதத்தை சேர்ந்த வீரன் (55) என்பவரது மாட்டு கொட்டகைக்குள் புகுந்து மாட்டு கன்றுகுட்டியை கடித்து கொன்றுள்ளது. அங்கிருந்து சென்ற சிறுத்தை பழைய ஆசனூர் கிராமத்தை சேர்ந்த மாதேவப்பா (45) மாட்டு கொட்டகைக்குள் புகுந்து அங்கு இருந்த கன்று குட்டியை கொன்றது.

பங்களா தொட்டி

பங்களா தொட்டி வகிராமத்தில் புகுந்த சிறுத்தை ராமன் என்பவரது மாட்டு கொட்டகைகுள் புகுந்து கன்று குட்டியை கடித்துள்ளது. சத்தம் கேட்டு எழுந்து வந்த ராமன் சத்தம் போடவே சிறுத்தை கன்று குட்டியை விட்டு விட்டு இருளில் சிறுத்தை மறைந்தது. சிறுத்தை கடித்ததில் அந்த கன்று குட்டி படுகாயம் அடைந்துள்ளது.

ஒரே இரவில் மூன்று கன்றுக்குட்டிகளை வேட்டையாடி உள்ளது. இதில் இரண்டு கன்று குட்டிகள் உயிரிழந்த நிலையில் ஒரு கன்றுக்குட்டி உயிருக்கு போராடி வருகிறது. வனத்துறையினர் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாகவும் சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்காமல் உள்ளதாகவும் கூறிய கிராம மக்கள் உரியிழந்த கன்றுகுட்டியுடன் ஆசனூர் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

வனத்துறை

வனத்துறை நேரில் பொதுமக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்படும் என எந்த தகவலும் தெரிவிக்கிறார்கள் பொதுமக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

விரைவில் பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர். மீண்டும் உயிர்பலி ஏற்படும் முன் ஆட்கொல்லி சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

SCROLL FOR NEXT