தமிழக செய்திகள்

செங்குன்றம் அருகே தெரு விளக்குகள் இல்லாததால் இருளில் மூழ்கும் சாலைகள்- வாகன ஓட்டிகள் அச்சம்

காவாங்கரை செல்லும் சாலையில் போதிய தெருவிளக்குகள் இல்லாததால் இருளில் மூழ்கிக் காணப்படுகிறது.

செங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளான கிரான்லைன், கரிகாலன் சோழன் சாலையில் இருந்து காவாங்கரை செல்லும் சாலையில் போதிய தெருவிளக்கு வசதிகள் இல்லாததால் இரவு நேரங்களில் அப்பகுதி இருளில் மூழ்கி காணப்படுகின்றன. இரவில் போதிய வெளிச்சம் இல்லாததால் வேலைக்குச் சென்று திரும்பும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கும், பாதுகாப்பற்ற சூழலும் நிலவுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது

காவாங்கரை செல்லும் சாலையில் போதிய தெருவிளக்குகள் இல்லாததால் இருளில் மூழ்கிக் காணப்படுகிறது. இதனால் திருட்டு மற்றும் வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

அவ்வழியே தனியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை நிலவுகிறது. எனவே இப்பகுதிகளில் போதிய தெருவிளக்குகள் அமைக்கப்பட வேண்டும். ஏற்கெனவே உள்ள மின் விளக்குகள் பழுதடைந்திருந்தால் அவற்றைச் சீரமைக்க வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT