நபர்களை விசாரணை செய்ததில் சந்தோஷ் மற்றும் கார்த்திக் என்ற நபர்களும் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
ஆவடி போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் உத்தரவின் பேரில் இணை கமிஷனர் சிவக்குமார், செங்குன்றம் துணை கமிஷனர் மகேஸ்வரி ஆகியோரது மேற்பார்வையில் உதவி ஆணையாளர் (பொறுப்பு) விவேக் கண்ணன் அறிவுரையின் பேரில் செங்குன்றம் சட்டம், ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் பாடியநல்லூர் மைதானத்தில் கண்காணித்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த முகமது கபீர், விஜய் குமார், ஹரிஷ் ஆகிய 3 பேரை சோதனை செய்தனர். அவர்கள் மெத்தபெட்டமைன் என்ற தடை செய்யப்பட்ட உயர் ரக போதை பொருளை கடத்தி வந்தது. இதைத்தொடர்ந்து மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர் அவர்களிடமிருந்து 3 செல்போன் மற்றும் சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 60 கிராம் எடையுள்ள மெத்த பெட்டமைன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.
மேற்படி நபர்களை விசாரணை செய்ததில் சந்தோஷ் மற்றும் கார்த்திக் என்ற நபர்களும் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. போதைப் பொருளை மடக்கிப்பிடித்த தனிப்படை போலீசாரை போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.