தமிழக செய்திகள்

தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - செங்கோட்டையன்

முதல் வாக்கு அளிக்கின்ற அத்தனை பேரும் புதிய மாற்றத்தை எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு ஒரு சிறந்த தலைவர் கிடைத்துள்ளார் என்ற எண்ணம் உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், கோபி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளருமான கே.ஏ.செங்கோட்டையன் இன்று கோபியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் . அப்போது அவர் கூறியதாவது:-

தலைவர் விஜய் பல்வேறு சோதனைகளை கடந்து சாதனை படைப்பதற்காக இரவு பகல் பாராமல் அத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீறு நடைபோட்டு கொண்டு உள்ளார்.

இதற்கெல்லாம் வரும் 4-ம் தேதி பதில் சொல்லும். சரித்திர தமிழகத்தில் முதலிடம் பெறக்கூடியவராக விஜய் திகழ்வார். மக்கள் கருத்துக்கணிப்பு தெளிவாக இருக்கும்.

நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பது உங்களுக்குத்தான் தெரியும்.

முதல் வாக்கு அளிக்கின்ற அத்தனை பேரும் புதிய மாற்றத்தை எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு ஒரு சிறந்த தலைவர் கிடைத்துள்ளார் என்ற எண்ணம் உள்ளது. அது 4-ந்தேதி பிரதிபலிக்கும். வெற்றிக்கு பிறகு விஜய் ஆட்சியை பிடிப்பார்.

விஜய் தமிழகத்தை ஆள வேண்டும் என்பதுதான் அன்றைய செய்தியாக இருக்கும். இது மக்களுடைய பிரதிபலிப்பு. நாங்கள் 150 முதல் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.

இளம் வாக்காளர்கள் அதிகம் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்துள்ளனர் என்று வைகோ கூறிய கருத்திற்கு, உண்மையிலே மனம் திறந்து வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க .தலைவர் நயினார் நாகேந்திரன் த.வெ.க சட்டமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்று கூறியதற்கு, பா.ஜ.க. இந்த தேர்தலுக்குப் பிறகு இருக்குமா? இருக்காதா ? என்பது தேர்தலுக்கு பின்பு தெரியும், என்றார்.