த.வெ.க.வின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் பழனியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சட்டசபை தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் த.வெ.க. வெற்றி பெறும்.
பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, சோசலிச புரட்சி போல மே 4-ம் தேதி விசில் புரட்சி நடைபெற உள்ளது.
விசில் புரட்சியால் தவெக அரியணையில் அமரும்.
யார் எத்தகைய கருத்துகளைக் கூறினாலும் தவெக வெற்றியை தடுக்க முடியாது என தெரிவித்தார்.