தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதாவது, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதையடுத்து, தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெற முயற்சி மேற்கொண்டு வருகிறது.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், பாமக ஆகியவற்றின் ஆதரவோடு கூட்டணி ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியில் விஜய் ஈடுபட்டுள்ளார்.
நாளை விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள நிலையில் செங்கோட்டையன் தலைமை செயலகம் சென்றார்.
தலைமை செயலகத்தில் சட்டமன்ற செயலாளரை நேரில் சந்தித்து செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சபாநாயகர் தேர்ந்தெடுப்பது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தினார்.