மின்சாரம் நிறுத்தம் 
தமிழக செய்திகள்

திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

ஆச்சாம்பட்டி, பாளையப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் தஞ்சை உதவி செயற்பொறியாளர் பாலக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை அருகே திருமலைசமுத்திரம் துணை மின் நிலையம் மற்றும் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் உயர்அழுத்த மின் பாதைகளில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

மின்தடை

எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை வல்லம்புதூர், மொன்னையம்பட்டி, குருவாடிப்பட்டி, நாட்டாணி, திருமலைசமுத்திரம், ஆலக்குடி, கல் விராயன் பேட்டை, செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம்பட்டி, வளம்பகுடி, ராயமுண்டான்பட்டி, ராயராம்பட்டி, சானூரப்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளையப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

அதேபோல் அள்ளூர், அல்சகுடி, அம்மையகரம், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், சக்கரைசாமந்தம், களிமேடு, பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் மின்வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT