தமிழக செய்திகள்

செல்வபுரத்தில் நகை செய்யும் கடையில் தங்கம்-வெள்ளி திருட்டு

நகை செய்யும் கடையில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கம் மற்றும் வெள்ளியை திருடி சென்ற நபர் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை செல்வபுரம் அருகே உள்ள சண்முகா ராஜபுரம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் சபாபதி (வயது 65). இவர் வீட்டு முதல் தளத்தில் தங்க நகை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இதற்காக அங்கு தங்கம் மற்றும் வெள்ளி வைத்து இருந்தார். சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு சபாபதி கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றுவிட்டார்.

கொள்ளை

அதன்பிறகு மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது நகை செய்யும் கடையில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 15 கிராம் தங்கம் மற்றும் 75 கிராம் வெள்ளி ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து சபாபதி செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கம் மற்றும் வெள்ளியை திருடி சென்ற நபர் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT