தமிழக செய்திகள்

கண்டெய்னர் லாரியில் கடத்திய ஒரு டன் குட்கா-புகையிலை பறிமுதல்

ஒரு டன் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

புகையிலை பொருட்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் தொடர்புடையவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி பஜாரில் ரொட்டம்பேடு சாலை திருப்பத்தில் இன்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

குட்கா

அப்போது அவ்வழியே வந்த மினி கன்டெய்னர் லாரி நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் டீத்தூள் அட்டை பெட்டிகளுக்கு இடையே சுமார் ஒரு டன் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

போலீசார் வழக்கு பதிவு

இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பெங்களூரைச் சேர்ந்த லாரி டிரைவர் வெங்கடேஷ் (33) மற்றும் நிஜாமுதீன் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். லாரியுடன் குட்கா, புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

பெங்களூரில் இருந்து குட்கா கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இந்த புகையிலை பொருட்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் தொடர்புடையவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT