தூத்துக்குடியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்தார். அப்போது, திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து சீமான் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை முன்கூட்டியே கைது செய்திருக்க வேண்டும். மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.
திமுக ஆட்சியிலும் சரி, தற்போது உள்ள ஆட்சியிலும் சரி, திருப்பரங்குன்றம் விவகாரம் சாதாரணமாக கையாண்டிருக்க வேண்டிய ஒன்று.
'உன் மதம் சிறந்தது வழிபடு; என் மதமும் சிறந்தது வழிவிடு' இவ்வளவுதான் கோட்பாடு: சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமியர்கள் வழிபடுவதற்கும், கோயிலில் இந்துக்கள் விளக்கேற்றுவதற்கும் அரசே உரிய பாதுகாப்பு கொடுத்தால் பிரச்சனை முடிந்துவிடும்.
அவர்கள் தர்காவில் வழிபடுவதற்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது. இவர்கள் தீபம் ஏற்றுவதற்கும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல், அரசே பாதுகாப்பு வழங்கி தீபம் ஏற்ற அனுமதித்திருக்க வேண்டும்.
அப்படிச் செய்திருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும். இதைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பிரச்சனை உருவாகிக்கொண்டே இருக்கும். திமுக அரசே இதைச் சரிசெய்திருக்க வேண்டும். ஆனால், விட்டுவிட்டார்கள்.
ஆனால் இப்போது ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பிரச்னை உருவாகிக்கொண்டே இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.