தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் நடப்பது திராவிட மாடல் அரசு அல்ல... விளம்பர மாடல் அரசு - சீமான்

கல்வியில் சிறந்த அறிஞர்கள் எத்தனை பேர் விழாவில் கலந்து கொண்டனர்?பட்டம் படித்துவிட்டு வெளியில் வரும் மாணவர்களுக்கு தாய் மொழியில் எழுத தெரியவில்லை.

சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* சென்னையில் நேற்று அரசு நடத்திய விழா கல்வி சாதனை விழாவாக தெரியவில்லை, சினிமா பாடல் வெளியீட்டு விழா போல் இருந்தது.

* கல்வியில் சிறந்த அறிஞர்கள் எத்தனை பேர் விழாவில் கலந்து கொண்டனர்?

* மாநிலம் முழுவதும் பல இடங்களில் அரசு பள்ளிகளை மூடிவிட்டு கல்வியில் சிறந்த தமிழ்நாடு என விழா நடத்துகிறீர்கள்.

* தமிழ்நாட்டில் நடப்பது திராவிட மாடல் அரசு அல்ல, விளம்பர மாடல் அரசு.

* பட்டம் படித்துவிட்டு வெளியில் வரும் மாணவர்களுக்கு தாய் மொழியில் எழுத தெரியவில்லை.

* தாய் மொழியான தமிழ்த்தேர்வு எழுதுவதற்கு 60,000 பேர் வராத அவலநிலை தமிழ்நாட்டில் தொடர்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.