சீமான் 
தமிழக செய்திகள்

தி.மு.க., அ.தி.மு.க. ஆதரவு அளித்தால் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்வேன்- சீமான்

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் பொது வேட்பாளர் நிறுத்துவது தொடர்பாக நானே இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ள சீமான், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆதரவை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்வேன் என தெரிவித்தார். தேவர் குருபூஜை நிகழ்வில் பங்கேற்ற அவர், அரசியல் கட்சிகள் தேவர் நினைவுகளை அரசியல் மாநாடாக மாற்றுவதை கண்டித்தார்.

தேவர் குருபூஜையையொட்டி பசும்பொன்னில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் பொது வேட்பாளர் நிறுத்துவது தொடர்பாக நானே இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அதே போல் பொது வேட்பாளர் குறித்து தி.மு.க.-அ.தி.மு.க.வும் கூட எந்த முடிவும் எடுக்கவில்லை.

இருந்த போதிலும் நான் சட்டமன்றத்திற்கு செல்வதில் உறுதியாக இருக்கிறேன். அதனால் தான் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து இருக்கிறேன். இதற்கிடையே பொது வேட்பாளர் என்ற புரளி தற்போது கிளப்பி விடப்பட்டுள்ளது.

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் எனக்கு ஆதரவு அளிக்க முன் வந்தால் நான் எப்படி வேண்டாம் என்று கூறுவேன்? அவர்களின் ஆதரவை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்வேன்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஒரு தேசிய மற்றும் தெய்வீக தலைவர் ஆவார். ஆனால் அவரது நினைவை போற்றும் இந்த ஜெயந்தி விழா ஒரு அரசியல் கட்சி மாநாடு போல் ஆளும் கட்சியால் மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT