திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
* மக்கள் அனைவரும் சும்மா இருக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர்.
* இலவச மிக்சி கொடுத்துவிட்டால் அதில் எதை அரைப்பது. கிரைண்டரில் எதை ஆட்டுவது. பிரிட்ஜ் கொடுத்தால் அதில் எதை வைப்பது.
* உங்கள் வீட்டில் திருடிவிட்டு ரூ.2000 கொடுத்தால் வாங்குவீர்களா?
* ஆட்சியாளர்களிடம் மக்கள் கேள்வி கேட்காமல் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை.
* என் இனத்திற்கு நிகழ்கால தேவை மட்டும் தான் தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.