தமிழகத்தில் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை செய்ய உள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தனித்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் ப. சத்தியபாமா, திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் எஸ். சுகன்யா, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கே. பானுமதி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் (சிபிஐ) சார்பில் பி. லட்சுமணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் எம். கார்த்திகா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தாராபுரம் வேட்பாளரை ஆதரித்து ந.த.க ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் முதற்கட்ட தேர்தல் பரப்புரை செய்ய உள்ளதாக, அக்கட்சியின் சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.
தாராபுரம் முருகன் கோவில் அருகில் நாளை (21.09.26) மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.