தமிழ்நாடு செய்திகள்

கோயம்பேடு, அண்ணா நகர் பகுதிகளில் சட்டவிரோதமாக இயங்கிவந்த 55 ஸ்பாக்களுக்கு போலீசார் சீல் வைத்தனர்

ஸ்பாக்களில் மசாஜ், பாலியல் தொழில்கள் நடந்த வருவதாகக் கிடைத்த தகவலை அடுத்து காவல்துறை நடவடிக்கைஸ்பாக்களின் உரிமையாளர்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

மாலை மலர்

சென்னையில் ஸ்பா என்ற பெயரில் மசாஜ், பாலியல் தொழில்கள் சட்டவிரோதமாக நடந்த வருவதாகக் கிடைத்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் கடந்த ஒரு மாதமாக தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கோயம்பேடு, அண்ணா நகர், திருமங்கலம் பகுதிகளில் உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.

ஸ்பாக்களின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.