தமிழக செய்திகள்

கடல் சீற்றம் எதிரொலி- திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை

விடுமுறை தினத்தால் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.கடலில் புனித நீராட தடை விதித்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம்.

கடல் சீற்றம் காரணமாக, திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடலில் அலையின் வேகம் மிக அதிகமாக இருப்பதால் கோயில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கெள்ளப்பட்டுள்ளது.

மேலும், கடலில் யாரும் குளிக்க கூடாது என ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

கோடை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

பக்தர்கள் அதிகளவில் குவிந்துள்ள நிலையில், கடலில் புனித நீராட தடை விதித்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT