2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய சமூக ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்டிபிஐ 3 தொகுதிகளை கோரியிருந்த நிலையில் 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இக்கட்சி இருந்தது. தற்போது அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறி திமுக கூட்டணியில் இணைந்தது.
எந்தக் கூட்டணியில் போட்டி என்பது நாளை உறுதி செய்யப்படும் என தேசிய துணைத்தலைவர் தெகலான் பாகவி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடைபெறும்.