தமிழக செய்திகள்

கலெக்டரிடம் விடுமுறை கேட்டு செல்போனுக்கு மெசேஜ் அனுப்பிய பள்ளி மாணவர்கள்

விடுமுறைக்காக மாணவர்களின் ‘வாட்ஸ்அப் போராட்டமும்’, கலெக்டரின் நகைச்சுவையான பதிலும் சமூக வலை தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

மாணவர்களின் சுவாரசியமான குறுஞ்செய்திகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ரெயின் பரிதாபங்கள்’ என கலெக்டர் ஆனந்த் மோகன் பகிர்ந்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலை முதலே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்ற ஏக்கத்தில் மாணவ-மாணவிகள் இருந்தனர்.

கலெக்டர்

சில மாணவர்கள் பொறுமையை கடந்து மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகனின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கோரி ஏராளமான குறுஞ்செய்திகளை அனுப்பிய வண்ணம் இருந்தனர்.

சில மாணவர்கள், “விடுமுறை விடாவிட்டால் எங்கள் மீது அக்கறை இல்லை” என்றும், மற்றொருவர் “நீங்கள் ஒரு மனிதனாகவும், ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும், மாவட்ட கலெக்டராகவும் தோல்வியடைந்து விட்டீர்கள்” என்றும் செல்லமாக கண்டித்து பதிவிட்டிருந்தனர்.

குறுஞ்செய்தி

மாணவர்களின் சுவாரசியமான குறுஞ்செய்திகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ரெயின் பரிதாபங்கள்’ என கலெக்டர் ஆனந்த் மோகன் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் “இங்க லீவு விடவில்லை என்றால் சில பேர்...” என ஜாலியாக பதிவிட்டுள்ளார்.

விடுமுறைக்காக மாணவர்களின் ‘வாட்ஸ்அப் போராட்டமும்’, கலெக்டரின் நகைச்சுவையான பதிலும் சமூக வலை தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

SCROLL FOR NEXT