தமிழக செய்திகள்

மாநில கல்விக் கொள்கை அடிப்படையில் பாடத்திட்டங்கள்: 31-ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம்-பள்ளிக் கல்வித்துறை

பொதுமக்கள் தங்கள் கருத்துகளை வரும் 31-ம் தேதிக்குள் அனுப்பக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025-ன் அடிப்படையில் புதிய கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டங்களை உருவாக்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் கலைத்திட்ட வடிவமைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இக்குழுவினரின் வழிகாட்டுதலின்படி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் ஆறு முதல் பத்து வகுப்புகளின் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இப்பாடத்திட்டங்களைக் கல்வியாளர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் https://tnschools.gov.in இணையத் தளத்தில் 20.08.2026 முதல் பார்க்கலாம்.

பாடத்திட்டம் சார்ந்து கருத்து கூறுவோார் https://tnschools.gov.in இணையத் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணையவழிப் படிவம் (online form) வாயிலாக, சுய விவரங்களுடன் தம் கருத்துகனை 31.08.2026-க்குள் அனுப்பக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளது.