நவீன சைக்கிள் வழங்கும் திட்டம் 
தமிழக செய்திகள்

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நவீன சைக்கிள் வழங்கும் திட்டம் - தமிழ்நாடு அரசு மின் ஒப்பந்தம் கோரியது

செப்டம்பர் 8, 2026 அன்று முற்பகல் 11 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தில் நடைபெறும்

கொள்முதல் ஆணை பெறப்பட்ட 150 நாட்களுக்குள் மிதிவண்டிகள் மற்றும் உபகரணங்கள் முழுமையாக விநியோகிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா நவீன மிதி வண்டிகள், தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்குவதற்காகத் தமிழ்நாடு அரசு மின்னணு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

இணையதளங்கள்

நடப்பு 2026-27-ம் கல்வியாண்டிற்காக 11-ஆம் வகுப்பு படிக்கும் 2,37,133 மாணவர்களுக்கும், 2,95,255 மாணவிகளுக்கும் என மொத்தம் 5,32,388 நவீன மிதிவண்டிகள், அவற்றுடன் தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டில் கொள்முதல் செய்யப்பட உள்ளன. தகுதியான உற்பத்தி நிறுவனங்கள் வரும் நாளை முதல் செப்டம்பர் 28, 2026 பிற்பகல் 3 மணி வரை https://tntenders.gov.in, https://tntenders.gov.in என்ற இணையதளங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்.

செப்டம்பர் 8, 2026 அன்று முற்பகல் 11 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தில் நடைபெறும்.

இதில் ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கான மாதிரி மிதிவண்டிகளைச் செப்டம்பர் 28, 2026 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பெறப்பட்ட தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளிகள் செப்டம்பர் 29, 2026 அன்று முற்பகல் 11.30 மணிக்கு இணையவழியாகத் திறக்கப்படும். கொள்முதல் ஆணை பெறப்பட்ட 150 நாட்களுக்குள் மிதிவண்டிகள் மற்றும் உபகரணங்கள் முழுமையாக விநியோகிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.