தமிழக செய்திகள்

BJP மீது அதிருப்தி... நயினார் நாகேந்திரனை சந்தித்த சரத்குமார்

உரிய பொறுப்பு வழங்கினால் திறம்பட கட்சி பணியாற்றுவேன்.

சென்னை:

பா.ஜ.க.வில் தனக்கு தேசிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. தகுதி இருந்தும் தேசிய அங்கீகாரம் வழங்காததால் தமது சமத்துவ மக்கள் கட்சியை புதுப்பிக்குமாறு ஆதரவாளர்கள் வலியுறுத்தியதாகவும் செய்தியாளர் சந்திப்பில் சரத்குமார் பேசியிருந்தார்.

இந்த நிலையில், சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனுடன் சரத்குமார் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, உரிய பொறுப்பு வழங்கினால் திறம்பட கட்சி பணியாற்றுவேன் என நயினார் நாகேந்திரனிடம் சரத்குமார் உறுதி அளித்தாக தகவல் வெளியாகி உள்ளது.

SCROLL FOR NEXT