தமிழக செய்திகள்

தமிழக சட்டப்பேரவை செயலாளராக சாந்தி பொறுப்பேற்பு

சீனிவாசன் கடந்த 15 ஆண்டுகளாக சட்டசபை செயலாளராக பணியாற்றி வந்தார்.

தமிழக சட்டசபை செயலாளராக செயல்பட்டு வந்தவர் சீனிவாசன். இவர் கடந்த 15 ஆண்டுகளாக சட்டசபை செயலாளராக பணியாற்றி வந்தார். அதாவது, தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அப்பதவியில் தொடர்ந்த அவர், த.வெ.க. ஆட்சியிலும் நீடித்தார்.

இதற்கிடையே, சட்டசபை செயலாளர் பதவியை சீனிவாசன் திடீரென ராஜினாமா செய்தார். விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலை​யில் சீனி​வாசன் பணி வில​கல் கடிதத்தை பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகரிடம் அளித்​தார்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை செயலாளராக சாந்தியை நியமித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தின் முதல் பெண் சட்டப் பேரவை செயலாளராக சாந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.