தமிழக செய்திகள்

TN DGP | தமிழ்நாடு காவல் துறை சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக பொறுப்பேற்றார் சந்தீப் ராய் ரத்தோர்

தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநராக பொறுப்பேற்றார் சந்தீப் ராய் ரத்தோர்.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதியன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்த காலகட்டத்தில் மாநிலத்தின் குறிப்பிட்ட அதிகாரம் தேர்தல் ஆணையம் வசம் இருக்கும்.

இந்த சூழலில் தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

தமிழக காவல் துறை சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக சந்தீப் ராய் ரத்தோரை தேர்தல் ஆணையம் நியமனம் செய்தது. 1992 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சந்தீப் ராய் ரத்தோர், பயிற்சிக் கல்லூரி டி.ஜி.பி. ஆக இருந்து வந்தவர் ஆவார்.

தேர்தல் ஆணையத்தால் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்ட நிலையில், சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதேபோல் சஞ்சய் குமார் ஐ.பி.எஸ். தாம்பரம் மாநகர காவல் ஆணையராகவும், அபிஷேக் தீக்ஷித் ஐ.பி.எஸ். மதுரை மாநகர காவல் ஆணையராகவும், மேற்கு மண்டள ஐ.ஜி.யாக ரம்யா பாரதி ஐ.பி.எஸ். ஆகியோரை தேர்தல் ஆணையம் நியமித்தது.