தமிழக செய்திகள்

சின்ன வெங்காயம் கிலோ ரூ.160 ஆக அதிகரிப்பு

பெரிய வெங்காயத்தின் விலையும் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது.

தட்டுப்பாடு காரணமாக மொத்த விற்பனையில் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.120வரை விற்பனை ஆகிறது. அதேபோல் வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.160வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை கோயம்பேடு, மார்க்கெட்டுக்கு திருச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. கடந்த மாதம் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.50 முதல் ரூ.60வரை விற்கப்பட்டது.

மழை

இந்த நிலையில் போதிய மழை இல்லாமல் வறட்சி ஏற்பட்டு வெங்காயம் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சின்ன வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதன் விலை திடீரென 3மடங்கு வரை அதிகரித்து உள்ளது. வழக்கமாக கோயம்பேடு சந்தைக்கு தினசரி 8 முதல் 9 லாரிகளில் சின்ன வெங்காயம் விற்பனைக்கு குவிந்து வரும். ஆனால் தற்போது வரத்து குறைவால் கடந்த சில நாட்களாகவே 2 லாரிகளில் மட்டும் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது.

தட்டுப்பாடு

தட்டுப்பாடு காரணமாக மொத்த விற்பனையில் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.120வரை விற்பனை ஆகிறது. அதேபோல் வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.160வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெரிய வெங்காயம்

இதபோல் பெரிய வெங்காயத்தின் விலையும் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.60வரையிலும் வெளி மார்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ ரூ.75 வரையிலும் வெங்காயம் விற்பனை ஆகிகிறது.

புரட்டாசி மாதம்

புரட்டாசி மாதம் தொடங்கியது முதலே தேவை அதிகரித்து உள்ளதால் பச்சை காய்கறிகளின் விலையும் மெல்ல மெல்ல உயர்ந்து உள்ளது. மொத்த விற்பனையில் பீன்ஸ் மற்றும் அவரைக்காய் கிலோ ரூ.80-க்கும், ஊட்டி கேரட், பீட்ரூட் மற்றும் முருங்கைக் காய் ஒரு கிலோ ரூ.40-க்கும் விற்கப்படுகிறது.

காய்கறி கடை

வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் பீன்ஸ் மற்றும் அவரைக்காய் ஒரு கிலோ ரூ.120வரையிலும், கேரட், பீட்ரூட் மற்றும் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.70வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. தினசரி சமையலுக்கு பயன்படுத்தும் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் மற்றும் காய்கறி களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இல்லத் தரசிகள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT