தமிழக செய்திகள்

தமிழுணர்வு ஊட்டிய புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்!- மு.க.ஸ்டாலின்

வாழ்த்துச் செய்தியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி.

சென்னை:

தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

"தமிழ் எங்கள் உயிரென்ப தாலே-வெல்லுந் தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே" "பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியில்வா! எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!" எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்! இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.