தமிழக செய்திகள்

சேலம் வெள்ளாளப்பட்டியில் வங்கி சுவரை உடைத்து கொள்ளை முயற்சி- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

உடனடியாக இதுகுறித்து கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார். மர்ம நபர்கள் சுவரில் துளையிட முயன்ற பகுதி நேரடியாக வங்கியின் லாக்கர் அறைக்கு செல்கிறது.

சேலம்:

சேலம் கருப்பூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது.

நேற்று காலை 11 மணியளவில் இந்த வங்கியின் பின்பக்க சுவரை உடைத்து மர்ம நபர்கள் சிலர் துளையிட்டு கொண்டிருந்தனர்.

இதனை அந்த வழியாக வந்த வங்கியின் மேலாளர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறத்து கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருப்பூர் போலீசார் வங்கியின் சுவரை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதில் மர்ம நபர்கள் சுவரில் துளையிட முயன்ற பகுதி நேரடியாக வங்கியின் லாக்கர் அறைக்கு செல்கிறது.

எனவே மர்மநபர்கள் கொள்ளையடிக்கும் நோக்கில் சுவரை துளையிட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம்நபர்களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT