புதிய மேயருக்காக மேயருக்காக இருக்கை தயாராகி வருவதை படத்தில் காணலாம். 
தமிழக செய்திகள்

சேலத்தில் புதிய மேயருக்காக தயாராகும் இருக்கை

சேலம் மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெற்று மெயராக அமரப்போவது யார்? என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மேயரை அமர வைப்பதற்கான இருக்கை தயாராகி வருகிறது.

சேலம்:

சேலம் மாநகராட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனை யொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்

சேலம் மாநகரில் உள்ள 60 வார்டுகளிலும் 60 மாமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த 60 மாமன்ற உறுப்பினர்களில் மேயர்  துணை மேயர் மற்றும் 4 மண்டல குழு தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.  

22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.  மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் மார்ச் 2 ம் தேதி பதவி ஏற்க உள்ளனர். மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 4ம் தேதி நடைபெற உள்ளது.

ஏற்கனவே  சேலம் மாநகராட்சில் புதிதாக கட்டடம் கட்டப்பட்டு  மாமன்ற உறுப்பினர்களுக்கென பிரத்தியே இருக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது. அறை முழுவதும் குளிரூட்டப்பட்ட  அரங்கில் தற்போது மாமன்ற உறுப்பினர்கள், மேயர்,  துணை மேயர் அமர்வதற்கான இருக்கைகளை பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளில் சேலம் மாநகராட்சி ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வந்தனர் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது 

சேலம் மாநகராட்சியின் புதிய பிரமாண்ட கட்டிடத்தில் மேயராக அமர போவது யார் என்பது மக்கள் கையில் உள்ளது. எனினும் யார் மேயர் ஆவார் என்பதை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் கணித்துவிடலாம் என்கின்றனர் அரசியல் கட்சியினர்.