மேட்டூர்:
மேட்டூரில் நான்கு அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் தினசரி 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் பழைய அனல் மின் நிலையம் உள்ளது.
இதன் அருகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் புதிய அனல் மின் நிலையம் உள்ளது. இவைகள் மூலமாக தினசரி மொத்தம் 1,440 மெகாவாட் மின் உற்பத்தி எடுக்கபடும்.
இந்நிலையில் கடந்த 6--ம் தேதி 840 மெகாவாட் பழைய அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 2-வது யூனிட்டில் 210 மெகாவாட் மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டது.
தற்போது கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு 4 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இன்று 2-வது அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது.