தமிழக செய்திகள்

முதுகலை ஆசிரியர் பணி-நாளை கணினி அறிவியல் தேர்வு

முதுகலை ஆசிரியர் பணிக்கான கணினி அறிவியல் தேர்வு நாளை நடக்கிறது.

மாலை மலர்

சேலம்:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1க்கான 2,207 பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ந்தேதி  வெளியிட்டது. இந்த எழுத்துத் தேர்வு  கடந்த 12-ந் தேதி  தமிழகம் முழுவதும் தொடங்கியது. நாளையுடன் (20-ந்தேதி) தேர்வு முடிவடைகிறது.

 பி.எட், எம்.எட்., படித்த வெளிமாவட்டங்களில் வசிக்கும் பட்டதாரிகள் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர். இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக தேர்வு நடக்கவில்லை. 

நாளை காலை (பேட்ஜ்-7) கணினி அறிவியல் பாடப்பிரிவிற்கு தேர்வு நடைபெறுகிறது. இதற்கான மாவட்ட நுழைவுச்சீட்டு மற்றும் தேர்வு மைய நுழைவு சீட்டு ஆகியவற்றை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  

நாளையுடன் எழுத்துத்தேர்வு முடிவடைவதை அடுத்து கேள்வித்தாளுக்கான விடை குறிப்புகள் விரைவில்  வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.