சேலம்:
சேலம் மாவட்டம் மேச்சேரி பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள செட்டியார் வீதியில் உள்ள பழைய இரும்பு குடோனில் நேற்ரு இரவு திடீரென பயங்க தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ மள மள என பரவி எரிந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அனைத்தனர். தீ விபத்து ஏற்பட்ட இடம் குறுகலான வீதியாக இருந்ததால் தீயணைப்பு வண்டிகள் செல்வதற்கும் துரிதமாக செயல்படுவதற்கும் சற்று கடினமாக அமைந்தது.
கொழுந்துவிட்டு எரிந்த தீயால் அப்பகுதியில் புகைமூட்டம் நிலவியது. இதனால் குடியிருப்பு வாசிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிக்குள்ளானார்கள்.
இந்த தீ விபத்தில் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்திருக்கலாம் என தெரிகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.