ஸ்வயம் தேர்வு(கோப்புபடம்) 
தமிழ்நாடு செய்திகள்

ஸ்வயம் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

மத்திய அரசின் கற்றல் பற்றிய இணையவழி படிப்புக்கான ஸ்வயம் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மாலை மலர்

சேலம்:

மத்திய  அரசின்   கல்வி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட ஸ்வயம் இணையதளத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான படிப்புகளை யு.ஜி.சி. அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த  படிப்புகளை பல்கலைக்கழகம்  அல்லது கல்லூரியில் பயிலும் மாணவர்களும், தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களும் இணையவழியில் படிக்கலாம். 

இத்திட்டத்தின் மூலம், 9  ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை வகுப்பறைகளில் கற்பிக்கப்படும் அனைத்து பாடத்திட்டங்களையும் அனைவரும் இலவசமாக பெறலாம்.  

இதில் 2 கோடியே 19 லட்சத்திற்கும்  மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000 க்கும் மேற்பட்ட சிறந்த ஆசிரியர்கள் இத்திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்திய அரசின் என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமை இதற்கான தேர்வுகளை நடத்துகிறது. 

இந்த நிலையில் ஆர்வமுள்ள இளம் வயதினருக்கான  கற்றல் பற்றிய  இணையவழி படிப்பு ஜூலை 2021, தேர்வுக்கான விண்ணப்பங்கள் தேசிய தேர்வு முகமை சார்பில் வரவேற்கப்படுகின்றன.  இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதிலும்  இருந்து ஏராளமான மாணவ,மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.  

ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி வருகிற 10 ம் தேதி வரை தற்போது  நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்படிவ கட்டணம் 11 ம் தேதி இரவு 11.50 மணிக்குள் கட்ட வேண்டும்.  ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களில் உள்ள விவரங்களில் திருத்தங்கள் 12 ம் தேதி முதல் 14 ம் தேதி இரவு 11.50 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். 

ஸ்வயம் மூலம் வழங்கப்படும் பாடப்பிரிவுகள் கற்பவர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் என்ற போதிலும், சான்றிதழ் பெற விரும்பும் மாணவர்கள் குறைந்த கட்டணம் செலுத்த வேண்டும். இறுதி தேர்வுகளுக்கு பதிவு செய்து, குறிப்பிட்ட தேதிகளில் நியமிக்கப்பட்ட மையங்களில் நேரடியாக தேர்வு எழுதலாம்.