கல்லூரி மாணவி காவியா. 
தமிழக செய்திகள்

சேலத்தில் கல்லூரி மாணவியின் வேட்பு மனு தள்ளுபடி

சேலத்தில் நாம்தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட கல்லூரி மாணவியின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மாலை மலர்

சேலம்:

சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்லாட்சி தேர்தலை முன்னிட்டு கடந்த 28ம் தேதி முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று வேட்பு மனுதாக்கல் முடிவடைந்த நிலையில் இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது.

சேலம் சிவதாபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி காவியா என்பவர் நாம் தமிழர் கட்சி சார்பாக 5 வது வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

இன்று அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் நடந்த வேட்பு மனு பரிசீலனையில் காவியாவுக்கு 21 வயது பூர்த்தியாக இன்னும் 4 மாதங்கள் இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து அவரது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர்.