கைப்பற்றப்பட்ட கஞ்சா பாக்கெட்டுகள் 
தமிழக செய்திகள்

சேலம் ரெயில் கழிவறையில் கிடந்த 15 கிலோ கஞ்சா

சேலம் வந்த ரெயிலில் கழிவறையில் கிடந்த 15 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மாலை மலர்

சேலம்:

சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கேரளாவுக்கு அதிக அளவில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் ரெயில்வே போலீசார் சோதனை செய்து கஞ்சாவை கைப்பற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் தன்பாத்திலிருந்து ஆலப்புழா செல்லும் ரெயிலில் சிலர் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் போதை தடுப்பு பிரிவு போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது ரெயிலில் உள்ள ஒரு கழிவறையில் அனாதையாக ஒரு பை கிடந்தது. அதனை எடுத்துப் பிரித்துப் பார்த்தபோது அதில் 15 கிலோ கஞ்சா இருந்தது  தெரியவந்தது.  அதனை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை கடத்தி வந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.