காய்கறிகளை சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வாங்கி செல்கிறார்கள்.
சேலம் மார்க்கெட்டுகள் மற்றும் உழவர் சந்தைகளுக்கு சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த காய்கறிகளை சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வாங்கி செல்கிறார்கள்.
சேலம் மார்க்கெட்டுகளில் கடந்த சில நாட்களாக முதல் தர வெங்காயம் 150 ரூபாய்க்கும், 2-ம் தரம் ரூ. 130, 3-ம் தரம் ரூ. 100-க்கும் விற்பனையாகிறது. வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தக்காளி ரூ.30, உருளை கிழங்கு ஊட்டி 80, திம்பம் 65, ஆக்ரா 30, பெரிய வெங்காயம் 70, பச்சை மிளகாய் 55, கத்திரி 60, வெண்டைக்காய் 50, முருங்கைக்காய் 90, பீர்க்கங்காய் 50, சுரக்காய் 35, புடலங்காய் 35, பாகற்காய் 50, தேங்காய் 70, முள்ளங்கி 50, பீன்ஸ் 80,அவரை 70, கேரட் 60, மாங்காய் 50, கீரைகள் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.