தமிழக செய்திகள்

வேம்படிதாளம், மின்னாம்பள்ளி, மல்லூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

தாளம்பள்ளம், உடுப்பத்தான் புதூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

சேலம் மாவட்டம் வேம்படிதாளம் துணைமின் நிலையம் எம்.டி.சவுத்ரி, வீரப்பன் ஸ்டீல் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்ெகாள்வதால் நாளை (22-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடுவனேரி, நடுவனேரி காட்டூர், தெற்கு மேடு,

பூசாரியூர், திருவளிப்பட்டி, காகாபாளையம், மகுடஞ்சாவடி, கூடலூர், தேவாரம்பாளையம், ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளி துணைமின் நிலையம் கூட்டாத்துப்பட்டி மின்பாதைகளில் பராமரிப்பு பணிக்காக நாளை (22-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பூசாரிப்பட்டி, அனுப்பூர்,

எஸ்.என். மங்கலம், ஏ.என்.மங்கலம், நீர்முள்ளிக்குட்டை, கூட்டாத்துப்பட்டி, கோலாத்துக்கோம்பை மற்றும் ராசாப்பட்டிணம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் மல்லூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (22-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மல்லூர் நகர், பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, பாரப்பட்டி, ஒண்டியூர், கீரனூர் வலசு, கீரனூர், நெ.3.கொமாரபாளையம், பொன்பாரப்பட்டி,

அனந்தகவுண்டம்பாளையம், பழந்தின்னிப்பட்டி, அலவாய்பட்டி, வெண்ணந்தூர், நடுப்பட்டி, நாச்சிப்பட்டி, மின்னக்கல், ஜல்லூத்துப்பட்டி, அத்தனூர், ஆலாம்பட்டி, தேங்கல்பாளையம், கரடியானூர், அண்ணாமலைப்பட்டி, தாளம்பள்ளம், உடுப்பத்தான் புதூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.

சேலம் மின் பகிர்மான வட்டம் உடையாப்பட்டி துணைமின் நிலையம் அம்மாபேட்டை மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (22-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காந்தி மைதானம், தியாகி நடேசன் தெரு 1 மற்றும் 2, தங்க செங்கோடன் தெரு, பல்லவன் ரோடு, மார்க்கெட் தெரு 1 மற்றும் 2, குமரகிரிப்பேட்டை, ேஜாதி டாக்கீஸ், குண்டு பிள்ளையார் கோவில், கிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என சேலம் கிழக்கு செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.