தமிழக செய்திகள்

கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரொக்க விலையில் விதைகள், உரங்கள் விற்பனை!

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்குப் பயிர்ச் சாகுபடிக்குத் தேவையான நிதியானது குறுகிய காலக் கடனாக வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில், விதைகள் மற்றும் இரசாயன உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்களை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கு (எம் ஆர் பி) மிகாமல் ரொக்கமாகப் பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் வாயிலாக விவசாயிகள் பயனடையும் வகையில், பயிர்ச் சாகுபடிக்குத் தேவையான விதைகள் மற்றும் இரசாயன உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்களை ரொக்கத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள விவரம் வருமாறு:-

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்குப் பயிர்ச் சாகுபடிக்குத் தேவையான நிதியானது குறுகிய காலக் கடனாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இக்கடனின் ஒரு பகுதியாக விதைகள் மற்றும் இரசாயன உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்களும் வழங்கி விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

பயன்பெறலாம்

தற்போது வரை கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்களாக இல்லாத விவசாயிகளும், உடனடியாக உறுப்பினராக இணைந்து குறைந்த வட்டியில் வழங்கப்படும் பயிர்க்கடனைப் பெற்றுப் பயனடையலாம். இதன் மூலம் விதைகள் மற்றும் இரசாயன உரங்களையும் அவர்கள் பெற முடியும்.

இந்நிலையில், விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில், விதைகள் மற்றும் இரசாயன உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்களை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கு (எம் ஆர் பி ) மிகாமல் ரொக்கமாகப் பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது பயிர்ச் சாகுபடிப் பரப்பு மற்றும் நில ஆவணங்களின் அடிப்படையில் இவற்றை ரொக்கம் கொடுத்து நேரடியாக வாங்கிப் பயன்பெறலாம்.

எனவே, தமிழக வேளாண் பெருமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தரமான விதைகள் மற்றும் உரங்களைப் பெற்றுப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT