விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் ஒன்பது வயதுச் சிறுமி காணாமல் போனது மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் வடமாநிலத் தம்பதியினரின் எட்டு வயதுப் பெண் குழந்தை மாயமாகியுள்ளது .இந்த நிலையில்தன்னைத் தானே தாய்மாமன் என விளம்பரப்படுத்திக் கொள்ளும் நிர்வாக திறனற்ற தவெக ஆட்சியில், பெண்கள் பொது வெளியில் நடமாடுவதற்கே அச்சப்படும் நிலையில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீரழிந்துள்ளது என்று அதிமுக தெரிவித்துள்ளது
இது குறித்து தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
தன்னைத் தானே ‘தாய்மாமன்’ என விளம்பரப்படுத்திக் கொள்ளும் நிர்வாக திறனற்ற தவெக ஆட்சியில், பெண்கள் பொது வெளியில் நடமாடுவதற்கே அச்சப்படும் நிலையில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீரழிந்துள்ளதுவிழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் ஒன்பது வயதுச் சிறுமி ஹேமலதா காணாமல் போய் இன்றுடன் ஒன்பது நாட்களாகியும், இதுவரை அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வரும் நிலையில், அடுத்த அதிர்ச்சியாக ஸ்ரீபெரும்புதூரில் வடமாநிலத் தம்பதியினரின் எட்டு வயதுப் பெண் குழந்தை மாயமாகியுள்ளது.
தான் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று மேடைதோறும் முழக்கமிட்ட முதலமைச்சர், தொடர்ச்சியாகச் சிறுமிகள் காணாமல் போகும் இந்த அவலங்களைப்பற்றி வாய் திறக்காமல் மௌனசாமியாராக இருப்பது ஏன்?
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலை பேசுவதிலும், அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குப் போட்டுச் சிறையில் அடைப்பதிலும் காட்டும் தீவிரத்தை, சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றுவதிலும் மக்களின் உயிரைக் காப்பதிலும் காட்டாதது ஏன்?
என்று தெரிவித்துள்ளது.