தமிழக செய்திகள்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு: இன்று மட்டும் 35 பைசா வீழ்ச்சி

அமெரிக்கா- ஈரான் இடையிலான ஒப்பந்தம் இன்றும் நிறைவடையாத நிலையில், உலக சந்தையில் ஒரு ஸ்திரதன்மையற்ற நிலை நிலவுகிறது.

அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சரக்கு கப்பல்களை அனுமதிக்க ஈரான் மறுத்து வருகிறது. இதனால் உலக நாடுகளுக்கு எரிபொருள் கிடைக்கபதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இது உலக பொருளாதாரத்தை மிகவும் பாதித்துள்ளது.

இதன்காரணமாக கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வருகிறது. உலக சந்தையில் ஒரு ஸ்திரதன்மையற்ற நிலை உருவாகியுள்ளதால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருகிறது.

இன்று ஒரே நாளில் 35 பைசா வீழ்ச்சி அடைந்து ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.63 ரூபாயாக உள்ளது. நேற்று 79 பைசா வீழ்ச்சியை சந்தித்து 95.28 ரூபாயாக இருந்தது. குறிப்பிடத்தக்கது.

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை நிஃப்டி ஆகியவையும் கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 1,456.04 புள்ளிகளும், நிஃப்டி 436.30 புள்ளிகளும் சரிந்தன.