தமிழக செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் ரூ.48 லட்சத்தில் குப்பை வாகனங்கள் - அமைச்சர் குமார் திறந்து வைத்தார்!

கீழ்முதலம்பேடு ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தனியார் நிறுவன பங்களிப்புடன் 21 ஊராட்சிகளுக்கு மொத்தம் ரூ.48 லட்சத்தில் 24 குப்பை சேகரிக்கும் மின்கல இயக்க வாகனங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் கவிதா தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. விஜயகுமார், தாசில்தார் பாலாஜி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில் குமார், மகேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் செயற்கை நுண்ணறிவு தகவல் தொழிற்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல்சேவைகள் துறை அமைச்சர் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மின்கல இயக்க வாகனங்களை ஊராட்சிகளின் பயன்பாட்டிற்கு வழங்கினார்.

மின்கல வாகனங்கள் வழங்கல்

அதன் அடிப்படையில் பூவலம்பேடு, குருவராஜகண்டிகை, கவரைப்பேட்டை, மாதர்பாக்கம், ஈகுவார்பாளையம், எருக்குவாய், பெரி யபுலியூர், கண்ணன்கோட்டை, மாதர்பாக்கம், தண்டலச்சேரி, தேர்வாய் கண்டிகை, ஏ.என்.குப்பம், சூரப்பூண்டி, சிறுபுழல்பேட்டை, அய்யர் கண்டிகை, கிளிக்கோடி, புதுகும்மிடிப்பூண்டி உள்ளிட்ட 21 ஊராட்சிக்களின் பயன்பாட்டிற்கு மேற்கண்ட குப்பை சேகரிக்கும் மின்கல இயக்க வாகனங்கள் வழங்கப்பட்டது.

வகுப்பறை திறப்பு ஆய்வு

இதனையடுத்து கவரைப்பேட்டை அடுத்த கீழ்முதலம்பேடு ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.35 லட்சத்தில் கட்டப்பட்ட 2 புதிய வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் குமார் திறந்து வைத்தார்.

இதனையடுத்து ஆரணி ஆறு படுகை தூர்வாரும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

SCROLL FOR NEXT