சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.- அ.தி.மு.க. கூட்டணி என்பது வதந்தி என தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
* தி.மு.க. ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படும் என தி.மு.க. தலைவர் அன்றைய தினமே தெரிவித்துவிட்டார்.
* தி.மு.க. 220 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற சரித்திர சாதனையை யாராலும் உடைக்க முடியவில்லை.
* வெற்றி பெற்ற போது ஆட்டம் போடவும் இல்லை, தோல்வி அடைந்த போது துவண்டு போனதும் கிடையாது.
* சி.வி.சண்முகம் எப்போதும் பதவியில் இருந்தவர். அவருக்கு பதவி ஆசை.
* த.வெ.க.வுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக ஏதோ ஒரு காரணம் தேவை எனக்கூறி தி.மு.க. மீது பழி சுமத்துகின்றனர்.
* பூட்டி வைத்துள்ளவர்கள் கதவை உடைத்துக்கொண்டு போவதற்கு காரணம் தேடுகின்றனர்.
* அ.தி.மு.க.வை விஜய் உடைக்கப்போகிறாரா? என்று அவரிடம் தான் கேட்க வேண்டும்.
* கம்யூனிஸ்ட் தலைவர் பேபி தான் கூறியதை வதந்தி என மறுத்துவிட்டார்.
* ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற போது தி.மு.க. என்ற இயக்கம் உடையவில்லை என்றார்.