தமிழக செய்திகள்

சைதை வாக்காளர்களுக்கு நல்ல சாவே வராது - ஆர்.எஸ்.பாரதி சாபம்

இனி மக்களுக்காக எதுவும் செய்ய வேண்டாம். கட்சிக்காரர்களுக்காக செய்யுங்கள்.

மா.சுப்பிரமணியனை தோற்கடித்த சைதாப்பேட்டை தொகுதி மக்களுக்கு நல்ல சாவே வராது என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சாபமிட்டுள்ளார்.

சென்னை காரம்பாக்கத்தில் நடந்த திமுக விழாவில் பேசிய அக்கட்சியின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:

தவெக ஆட்சி

தவெக ஆட்சிப் பொறுப்பேற்றதும் வீட்டு வரி எல்லாம் உயர்ந்து விட்டதாம். அதுபற்றி நமக்கு என்ன கவலை.

இனிமேல் நாம் அனைவரும் வாயை மூடிக்கொண்டு தான் இருக்க வேண்டும். இதற்குக் காரணம் வாக்களித்தவர்கள் தான். அவர்களே தங்களது தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்ட பிறகு தான் புத்தி வரும்.

மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியனை தோற்கடித்த சைதாப்பேட்டை தொகுதி மக்களுக்கு நல்ல சாவே வராது.

மா.சுப்பிரமணியன் கொண்டுவந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களின் உறவினர்கள் ஓட்டுபோட்டே தவெக வெற்றி பெற்றுள்ளது.

போதைப்பொருள் பயன்பாடு

இனி மக்களுக்காக எதுவும் செய்ய வேண்டாம். கட்சிக்காரர்களுக்காக செய்யுங்கள். 5 ஆண்டுகள் ஓய்வெடுப்போம்.

பேருந்து நிலையங்களில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.