2026-27 நிதியாண்டிற்கான தமிழக நிதி நிலை அறிக்கை இன்று தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் கீழ், நிதித்துறை அமைச்சர் என். மரிய வில்சன்-ஆல் சமர்ப்பிக்கப்பட்டது.
காலை 10 மணிக்கு இந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் மரிய வில்சன், தனக்கு அனைத்தும் கொடுத்த மக்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் அரசியலுக்கு வந்துள்ளதாக கூறினார்.
மேலும் அவர், பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம், ஆனால் செய்யும் செயலில் தான் அவர்கள் சிறப்பு இயல்புகள் வேறுபடுகின்றன எனவும் கூறினார்.
இதையடுத்து அமைச்சர் தாக்கல் செய்த பெட்ஜெட்டில், பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கு ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.
அதன்படி 300 திருக்குறளை மனப்பாடம் செய்து சொல்லும் 500 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சூப்பர் கிளீன் கேம்பஸ் (பள்ளி வளாகத்தை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருத்தல்) திட்டத்திற்கு ரூ.139 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட அறிக்கையில், 3,734 பள்ளிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு ரூ.2,132 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.