தமிழக செய்திகள்

எண்ணூரில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.43 லட்சம் மோசடி

தீபாவளி பண்டிகை நெருங்கி உள்ள நிலையில் தனக்கான பணம் மற்றும் பொருட்கள் வரும் என்று காத்திருந்த கல்யாணி ஏமாற்றம் அடைந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் வினோத் குமார் தீபாவளி சீட்டு நடத்தி சுமார் ரூ.43 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.

எண்ணூர், வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவரது மனைவி கல்யாணி. இவர் அதே பகுதியை சேர்ந்த வினோத் குமார் என்பவரிடம் தீபாவளி சீட்டு பணம் கட்டி வந்தார். மேலும் அவர் தனக்குத் தெரிந்த உறவினர்கள், நண்பர்களையும் இந்த தீபாவளி சீட்டில் சேர்த்து உள்ளார்.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை நெருங்கி உள்ள நிலையில் தனக்கான பணம் மற்றும் பொருட்கள் வரும் என்று காத்திருந்த கல்யாணி ஏமாற்றம் அடைந்தார்.

இது பற்றி கேட்பதற்காக வினோத் குமார் வீட்டிற்கு சென்றபோது அவரது வீடு பூட்டி கிடந்தது. அவர் குடும்பத்துடன் தலைமறைவாகி இருப்பது தெரிந்தது.

போலீசில் புகார்

இதனால் அதிர்ச்சி அடைந்த கல்யாணி எண்ணூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் வினோத் குமார் தீபாவளி சீட்டு நடத்தி சுமார் ரூ.43 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதுபற்றி அறிந்ததும் வினோத் குமாரிடம் பணம் செலுத்தியவர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். அவர்களும் போலீசில் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT