தமிழக செய்திகள்

விஐபி தரிசனத்திற்கு ரூ.4,000 வசூல்: யாராக இருந்தாலும் பாகுபாடு இன்றி விரைவில் நடவடிக்கை- அமைச்சர் ரமேஷ்

அமைச்சர் ரமேஷிடமே அர்ச்சகர்கள் ரூ.4,000 வசூல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்செந்தூர் கோவிலில் விஐபி தரிசனத்திற்கு அழைத்து செல்வதாக கூறி அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடமே அர்ச்சகர்கள் ரூ.4,000 வசூல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடு இல்லாமல் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தொடர்ந்து பக்தர்கள் தரிசனம், அன்னதானம், அடிப்படை வசதிகள், சொத்துப் பதிவேடு விவரங்கள், திருப்பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள கோயிலுக்கு வர வேண்டிய வருவாய் போன்ற பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம்.

முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடு இன்றி விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.