தமிழக செய்திகள்

அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் கே.என்.நேரு

எந்த இடத்திலும் அம்மா உணவகங்கள் நிறுத்தப்படவில்லை.மழைக்காலத்தில் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவு.

நகராட்சி நிர்வாகத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றினார்.

அப்போது, அம்மா உணவகங்கள் குறித்து பேசிய அவர், " எந்த இடத்திலும் அம்மா உணவகங்கள் நிறுத்தப்படவில்லை. அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்" என்றார்.