தமிழக செய்திகள்

தினசரி 1000 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் எண்ணெய் நிறுவனங்கள்

இந்தியா 40 சதவீதம் கச்சா எண்ணெயை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறது.

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இருந்தபோதிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல், வீட்டு சமையல் கியாஸ் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. வணிக சிலிண்டர் விலை கடந்த வாரம் சுமார் 1000 ரூபாய் வரை உயர்ந்தது.

பெடரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படாததால் எண்ணெய் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாள் ஒன்றுக்கு 700 கோடி ரூபாய் முதல் 1000 கோடி ரூபாய் வரை இழப்பை சந்திக்கிறதாம். அந்த வகையில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்திப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்தியா 40 சதவீதம் கச்சா எண்ணெயை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறது. 90 சதவீதம் சமையல் கியாஸ், 65 சதவீதம் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்கிறது.