தமிழக செய்திகள்

2 கைகளையும் விட்டுவிட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டியவருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம்- போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது விஜய்யை பார்த்த உற்சாகத்தில் இரண்டு கைகளையும் உயர்த்தியபடி மோட்டார் சைக்கிளை ஓட்டியதாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று முன்தினம் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். கோட்டூர்புரம் பகுதியில் விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டபோது அவரது வாகனத்தின் முன்னே 2 கைகளையும் விட்டுவிட்டு உற்சாகமாக ஒரு நபர் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனைப் பார்த்த கோட்டூர்புரம் போக்குவரத்து போலீசார் அந்த நபர் யார் என்பதை கண்டுபிடித்தனர்.

அவரது பெயர் மனு குமார் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது விஜய்யை பார்த்த உற்சாகத்தில் இரண்டு கைகளையும் உயர்த்தியபடி மோட்டார் சைக்கிளை ஓட்டியதாக தெரிவித்துள்ளார். ஆனால் வீடியோ காட்சிகள் காரணமாக அவர் போலீசில் சிக்கி அபராதம் கட்ட நேரிட்டுள்ளது.